மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனில் தேஷ்முக், பணமோசடி வழக்கில் கடந் த நவம்பர் 1-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
அனில் தேஷ்முக்கை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சிறையில் தனக்கு வீட்டு உணவு வழங்க அனுமதிக்க வேண்டும் என அனில் தேஷ்முக் தரப்பில் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசார ணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, "முதலில் சிறையில் தரப்படும் உணவை சாப்பிடுங்கள். அதுசரியில்லை என்றால் வீட்டு உணவு தருவதற்கு அனுமதி வழங்குகிறேன்" என உத்தர விட்டார்.
அதே நேரத்தில் அவருக்கு மருந்துகள் அளிக்கவும் நீதிபதி அனுமதி வழங்கினார். மேலும், அனில் தேஷ்முக்குக்கு 71 வயதாவதால் அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சிறையில் அவருக்கு படுக்கை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். -பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago