பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங். நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்குவதாக அமரீந்தர் சிங் அறிவித்தார். அவரது கட்சி பெயரை பதிவு செய்யுமாறு தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் அமரீந்தர் சிங் விண்ணப்பித்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து டெல்லி வட்டாரங் கள் கூறும் போது, “மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 29-ஏ ஷரத்தின்படி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற அரசியல் கட்சியைப் பதிவு செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு இன்று விண்ணப்பம் வந்துள்ளது” என்று தெரிவித்தன.
79 வயதாகும் அமரீந்தர், பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியை தீவிரமாக வளர்த்தவர். ராணுவத் தில் கேப்டனாக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து முதல்வர் பதவி வரை முன்னேறியவர் அமரீந்தர் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago