இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை ஒட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14-ம் தேதி, இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகளிடத்தில் அவர் காட்டிய அன்பை நினைவுக்கூரும் விதமாக, இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில், நேருவின் பிறந்தநாளான நேற்று, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பலரும் நேருவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.
இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “உண்மை, ஒற்றுமை மற்றும் அமைதிக்கு ஜவஹர்லால் நேரு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். இந்த தினத்தில் அவரை நாம் நினைவுக்கூருவோம். தலைமுறை கடந்த அமைதியே நமக்கு இப்போது தேவை " எனக் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago