அகர்தலா: வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து திரிபுராவில் தர்மநகர் மாவட்டத்தில் சமீபத்தில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் நடத்தப்பட்ட ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டது. மேலும், கோமதி மாவட்டத்தில் மசூதி ஒன்று சேதப்படுத்தப்பட்டதாக வதந்திகள் பரவின. மசூதி தாக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை தெளிவுபடுத்தியது. இந்நிலையில், சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டதாக பெண் பத்திரிகையாளர்கள் சம்ரிதி சகுனியா, ஸ்வர்ணா ஜா ஆகியோருக்கு எதிராக விஸ்வ இந்து பரிஷத் புகார் அளித்தது.
இதையடுத்து, அந்த 2 பெண் பத்திரிகையாளர்கள் மீது 2 மதங்களைச் சேர்ந்தவர்களிடையே விரோதத்தை தூண்டுவதாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், தாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு நேற்று காலை போலீஸார் வந்து மிரட்டியதாக ட்விட்டரில் சகுனியா தெரிவித்தார். ஆனால், 2 பெண் பத்திரிகையாளர்களை போலீஸார் சந்தித்து புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அளித்ததாகவும் அவர்கள் வழக்கறிஞருடன் ஆஜராக அவகாசம் கோரியதையடுத்து வரும் 21-ம் தேதி ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago