இதுவரை 112 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது : மத்திய சுகாதாரத் துறை தகவல்

By செய்திப்பிரிவு

நாடு முழுவதும் இதுவரை மக்களுக்கு 112.01 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை நேற்று காலை 7 மணிக்கு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கப்பட்டது. அன்று முதல் இதுவரை மக்களுக்கு 112.01 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் காலை 7 மணி வரை 52 லட்சத்து 28,385 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

11,271 பேருக்கு கரோனா

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 11,271 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் 285 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது தினசரி பாசிட்டிவ் 0.90 சதவீதமாகவும் வாராந்திர பாசிட்டிவ் 1.01 சதவீதமாகவும் உள்ளது. தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 35,918 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 17 மாதங்களில் மிகக் குறைவான எண்ணிக்கையாகும். மேலும், கடந்த மார்ச் 2020-ல் இருந்து ஒரு சதவீதத்துக்கும் குறைவாகும்.

நாடு முழுவதும் குணமடை வோர் எண்ணிக்கை 98.26 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 11,376 பேர் குணமடைந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து இதுவரை 3 கோடியே 38 லட்சத்து 37,859 பேர் குணமடைந்துள்ளனர்.

இவ்வாறு புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது. -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்