தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு 2019-20-ல் அதிக நன்கொடை :

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ஜனநாயக சீர்திருத்த சங்கம் சமீபத்தில் நடத்திய ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2019-20ம் ஆண்டில் நாட்டில் மொத்தமுள்ள 53 மாநில கட்சிகளில், 28 கட்சிகள் மட்டுமே தணிக்கை அறிக்கை மற்றும் பங்களிப்பு அறிக்கையை மத்திய தேர்தல் ஆணையத்துக்கு சமர்ப்பித்துள்ளன. அதன்படி, கடந்த 2019-20 நிதியாண்டில், நாட்டில் உள்ள 25 மாநில கட்சிகளின் மொத்த நன்கொடை ரூ. 803 கோடி ஆகும். இதில் அதிகப்படியாக தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு (டிஆர் எஸ்) ரூ. 89 கோடி நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக, தெலுங்கு தேசம் ரூ. 81.6 கோடியும், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ரூ. 74.7 கோடியும், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ரூ. 50.5 கோடியும், திமுக ரூ. 45.5 கோடியும் நன்கொடையாக பெற்றுள்ளன. இவை யாவும் பெயர் குறிப்பிட விரும்பாத அமைப்புகள் மற்றும் நபர்களிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்டுள்ளன.

ஒரு கட்சிக்கு ரூ. 20 ஆயிரத்திற்கும் கீழ் யாராவது நன்கொடை வழங்கினால், அவர்களின் பெயரை தெரியப்படுத்த தேவையில்லை. இதனை பயன்படுத்தி தங்களுக்கு நன்கொடையாக வரும் பணத்தை ரூ. 20 ஆயிரத்திற்கும் கீழ் பல பெயர்கள் மற்றும் அமைப்புகள் பெயரில் கட்சிகள் கோடிக்கணக்கில் கணக்கு காட்டி விடுகின்றன. இவ்வாறு ஜனநாயக சீர்திருத்த சங்கம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்