மும்பை: கிழக்கு மகாராஷ்டிராவில் சத்தீஸ்கர் எல்லையை ஒட்டி கட்சிரோலி மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் மார்டிந்தோலா வனப் பகுதியில் மாவோயிஸ்ட்களை தேடும் பணியில் மகாராஷ்டிர கமாண்டோ போலீஸார் நேற்று காலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோர்ச்சி என்ற இடத்தில் அவர்களுக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பிற்பகல் வரை நீடித்தது.
இது தொடர்பாக கட்சிரோலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அங்கித் கோயல் நேற்று மாலை கூறும்போது, “கூடுதல் எஸ்.பி. சவும்யா முண்டே தலைமையில் போலீஸ் கமாண்டோ படையினர் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மாவோயிஸ்ட்களுடன் மோதல் ஏற்பட்டது. சம்பவ இடத்திலிருந்து இதுவரை 26 மாவோயிஸ்ட்களின் உடல்களை கைப்பற்றியுள்ளோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago