மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 11,850 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், 555 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 3 கோடியே 44 லட்சத்து 26,036 பேர் கரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். அதேபோல் 4 லட்சத்து 63,245 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 36,308 ஆக குறைந்துள்ளது.
நாடு முழுவதும் குணமடை வோர் எண்ணிக்கை 98.26 சதவீதமாக உள்ளது. தினசரி பாசிட்டிவ் 0.94 சதவீதமாக உள்ளது. இவ்வாறு புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது. -பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago