தென் மண்டல முதல்வர்கள் மாநாடு : திருப்பதி வந்தார் அமைச்சர் அமித் ஷா :

By செய்திப்பிரிவு

திருப்பதி: திருப்பதி தாஜ் நட்சத்திர ஓட்டலில், 29-வது தென் மண்டல முதல்வர்கள் வளர்ச்சி கவுன்சில் மாநாடு இன்று நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் கர்நாடக முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், புதுச்சேரி, கோவா, அந்தமான் - நிக்கோபார் தீவுகளின் ஆளுநர்களும், முதன்மைச் செயலாளர்களும், மத்திய, மாநில அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாநாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகிக்கிறார். மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு 8.20 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வந்தார். அவரை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் அமித் ஷாவும், ஜெகன்மோகன் ரெட்டியும் திருமலை சென்றனர். அங்கு, தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி, அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி ஆகியோர் இருவரையும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். சிறிது நேர ஓய்வுக்கு பின்னர், இருவரும் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்