இந்தியாவில் பெகாசஸ் என்ற செயலி மூலம் பலருடைய தொலைபேசி உரையாடல்களை மத்திய அரசு ஒட்டுக்கேட்டது என்ற சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து விசாரணை கோரி பத்திரிகையாளர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்னாள் நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் தலைமையில் 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இதுகுறித்து மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று கூறும்போது, “நிபுணர் குழுவுக்கு மத்திய அரசு அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும். இந்த குழுவுக்கு தேவையான வசதிகள் வழங்கப்படும்’’ என்று தெரிவித்தார். -பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago