பெண் ராணுவ அதிகாரிகளுக்கு நிரந்தர பணி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி :

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ராணுவத்தின் முப்படைகளிலும் பெண்கள் 10 முதல் 14 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருக்க முடியும் என்ற விதிமுறை இருந்தது. இதற்கு எதிராக ராணுவத்தில் பணிபுரியும் பெண் அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், பெண்களுக்கும் ராணுவத்தில் நிரந்தரப் பணி வழங்க கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. ராணுவப் பணிக்கான மதிப்பீட்டில் 60 சதவீதம் பூர்த்தி செய்யும் பெண் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தும் எனவும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்த மத்திய அரசும், ராணுவமும் காலம் தாழ்த்தி வந்தன. இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி 11 பெண் ராணுவ அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு, நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 11 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு 10 நாட்களுக்குள் நிரந்தரப் பணி வழங்கப்படும் என்றும், மீதமுள்ள பெண் அதிகாரிகளுக்கு 3 வாரங்களுக்குள் நிரந்தரப் பணி அளிக்கப்படும் எனவும் மத்திய அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்