பிட்காயின் முறைகேட்டில் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு தொடர்பு : காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

By இரா.வினோத்

பிட்காயின் முறைக்கேடு விவகாரத்தில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு தொடர்பு இருப்பதாக கர்நாடக முன்னாள் அமைச்சர் பிரியங்க் கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான‌ பிரியங்க் கார்கே

பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிட்காயின் முறைகேட்டில் பாஜக மூத்த‌ தலைவர்களுக்கும் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் பசவராஜ் பொம்மை இந்த விவகாரத்தில் மவுனமாக உள்ளார். டெல்லி சென்று பாஜக மேலிடத் தலைவர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் தொடர்பு இல்லை என்றால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டியதுதானே?

இந்த விவகாரத்தில் காங்கிரஸின் அழுத்தத்தின் காரணமாகவே முதல்வர் அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். காங்கிரஸாருக்கு தொடர்பு இருந்தால் அவர்களையும் தண்டிக்கட்டும். அதே வேளையில் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு அரசு முயற்சிக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக கர்நாடக கிராம ப‌ஞ்சாயத்து துறை அமைச்சர் ஈஸ்வரப்பா கூறும்போது, ''பிட்காயின் முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் பெயர்களை காங்கிரஸார் ஆதாரத்துடன் வெளியிட வேண்டும். அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்''என எச்சரித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்