நாட்டில் புதிதாக 13,091 பேருக்கு கரோனா தொற்று :

By செய்திப்பிரிவு

மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளி விவரம் வருமாறு:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 13,091 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 340 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 62,189 ஆக உயர்ந் துள்ளது. கரோனா தொற்றுக்கு தற்போது 1 லட்சத்து 38,556 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 266 நாட்களில் மிகக் குறைந்த எண்ணிக்கை ஆகும்.

கரோனா பரிசோதனையில் தினசரி பாசிட்டிவ் விகிதம் 1.10 சதவீதமாக உள்ளது. இது கடந்த 38 நாட்களாக 2 சதவீதத்துக்கு குறைவாக உள்ளது. வாராந்திர பாசிட்டிவ் விகிதம் 1.18 சதவீதமாக உள்ளது. இது கடந்த 48 நாட்களாக 2 சதவீதத்துக்கு குறைவாக உள்ளது.

நாடு முழுவதும் 120 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள் ளன. இவ்வாறு புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது. -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்