மஞ்சிராலா: தெலங்கானாவில் நிலக்கரிச் சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெலங்கானாவில் உள்ள மஞ்சிராலா நிலக்கரி சுரங்கத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், நிலக்கரி சுரங்கத்தின் ராம் பூர் சிங்கரேணி எஸ் ஆர் பி-3 பிரிவில் திடீரென நேற்று மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்த கிருஷ்ணா ரெட்டி (59), லட்சுமைய்யா (60), நரசிம்ம ராஜு (30), சந்திரசேகர் (29) ஆகிய4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
இவர்களின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிரேதப் பரிசோதனைக்கு பிறகு தொழிலாளிகளின் உடல்கள்அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என சிங்கரேணி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்கூரை இடிந்து விழுந்தது எப்படி என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago