காஷ்மீரில் இந்த ஆண்டில் இதுவரை பல்வேறு இடங்களில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிர வாதிகளுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டைகளில் 138 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இவர் களில் நகர் பகுதியில் 130 தீவிர வாதிகளும் ஜம்மு பகுதியில் 8 தீவிரவாதிகளும் கொல்லப் பட்டதாக காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி. விஜயகுமார் தெரிவித்தார். மேலும் 55 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு, அவர்களின் சதித் திட்டங்கள் முறியடிக்கப்பட்ட தாகவும் அவர் கூறினார்.
பொதுமக்கள் மீது தாக்குதல்
இந்நிலையில், பாதுகாப்பு படையினரின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத தீவிரவாதிகள் சமீப காலமாக அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி கொன்று வருகின்றனர். இது மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, தீவிரவாதிகளை ஒடுக்கவும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காஷ்மீருக்கு கூடுதலாக 5,500பாதுகாப்பு படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.சிஆர்பிஎப் படையைச் சேர்ந்த3,000 வீரர்களும் எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2,500 வீரர்களும் காஷ்மீருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிஆர்பிஎப் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரைவில் இந்த வீரர்கள் காஷ்மீரில் பாதுகாப்பு மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப் படுவார்கள் என்றும் அதிகாரிகள் கூறினர். காஷ்மீரில் ஏற்கெனவே 25 கம்பெனி சிஆர்பிஎப் வீரர்கள் பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.-பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago