கடந்த 24 மணி நேரத்தில் 11,466 பேருக்கு கரோனா - கேரளாவில் தொற்று அதிகரிப்பு :

By செய்திப்பிரிவு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 11,466 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 460 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 11,466 பேருக்குகரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் 460 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 43 லட்சத்து 88,579 ஆனது. அதேபோல் உயிரிழப்பு நாடு முழுவதும் 4 லட்சத்து 61,849 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் குணமடைவோர் 98.25 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,961 பேர் குணமடைந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து குணமடைந்தோர் எண்ணிக்கை நாடு முழுவதும் இதுவரை 3 கோடியே 37 லட்சத்து 87,047 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது ஒரு லட்சத்து 39,683 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவும் கடந்த 264 நாட்களில் மிக குறைவாகும். தற்போது மொத்த பாதிப்பில் 0.41 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இது ஒரு சதவீதத்துக்கும் குறைவானது. தினசரி பாசிட்டிவ் 0.90 சதவீதமாக உள்ளது. இதுவும்கடந்த 37 நாட்களாக 2 சதவீதத்துக்கு கீழாக உள்ளது. அதேபோல்,வாராந்திர பாசிட்டிவ் 1.20 சதவீதமாக உள்ளது. இதுவும் கடந்த 47 நாட்களாக 2 சதவீதத்துக்கும் கீழாக உள்ளது.

61.85 கோடி பேருக்கு சோதனை

இதுவரை நாடு முழுவதும் 61.85 கோடி பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 109 கோடியே 63 லட்சத்து 59,208 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத் துறை புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.

71 ஆயிரம் பேருக்கு சிகிச்சை

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும், கேரளாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து கேரள மாநில சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், ‘‘கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 6,409 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அத்துடன், 47 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 6,319 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 71,020 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலம் முழுவதும் இதுவரை 34,362 பேர் உயிரிழந்துள்ளனர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.-பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்