அனைத்து மத்திய துறைகளின் செயலாளர்கள் மற்றும் மத்திய மருத்துவமனைகளின் இயக்குநர் களுக்கு மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி, தேசிய அளவில் தொடங்கி வைக்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தில் (ஏபிடிஎம்) அரசின் அனைத்து மருத்துவ அமைப்புகளும் பங்கேற்க வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே மருத்துவமனைகள், கிளினிக்குகள், ஆய்வகங்கள், மருந்தகங்கள், ரேடியாலஜி மையங்கள் போன்ற அனைத்து மருத்துவ வசதிகளும் ஏபிடிஎம்-ன் மருத்துவ வசதிகள் பதிவேட்டில் (எச்எப்ஆர்) கட்டாயமாகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் அனைத்து மருத்துவ அமைப்புகளிலும் பணியாற்றும் முழு நேர மற்றும் பகுதி நேர மருத்துவர்களின் பெயர் களும் அதில் பட்டியலிடப்பட வேண்டும். பொதுமக்களின் நலன் கருதி இந்த தகவல்களை உடனடியாக பதிவிட வேண்டும். இவ்வாறு ராஜேஷ் கூறியுள்ளார்.-பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago