மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தல் சோனியா காந்தி ஆலோசனை :

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாஜக ஆட்சியில் உள்ள மணிப்பூரில் 60 எம்எல்ஏக்கள் கொண்ட சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலை சந்திப்பது குறித்து மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி நேற்று டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் பொதுச் செயலாளரும் கட்சியின் மணிப்பூர் மாநில பொறுப்பாளருமான பக்த் சரண் தாஸ், மாநில நிர்வாகிகள், எம்எல்ஏ.க்கள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மணிப்பூர் காங்கிரஸ் பொறுப்பாளர் பக்த் சரண் தாஸ், ‘‘மணிப்பூர் தேர்தலில் காங்கிரஸின் வெற்றி வாயப்புகள் குறித்தும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். மணிப்பூர் காங்கிரஸ் நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். மணிப்பூர் அரசியல் நிலவரம் மற்றும் நாட்டின் பொதுவான அரசியல் நிலைமைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்