மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரம்:
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 11,451 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனா மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 3 கோடியே 43 லட்சத்து 66,987 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 266 பேர் உயிரிழந்தனர். கேரளாவில் மட்டும் 201 பேரும் மகாராஷ்டிராவில் இருந்து 16 பேரும் இறந்துள்ளனர். உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 61,057 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1 லட்சத்து 42,826 ஆக குறைந்துள்ளது. இவ்வாறு புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago