முன்னாள் அதிகாரி சச்சின் பணம் வசூல் : நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தகவல் :

By செய்திப்பிரிவு

மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மும்பை வீட்டின் முன்பு வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் நிறுத்தப்பட்டது தொடர்பான வழக்கில் மும்பை போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அப்போதைய மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை அமலாக்கத் துறை அண்மையில் கைது செய்த்து. அவர் மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம்வழக்கு விசாரணைக்கு வந்த போது, “முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கின் உத்தரவின்பேரில் மதுபான விடுதி உரிமையாளர்களிடம் முன்னாள் போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் பணம் வசூல் செய்தார். மேலும் கிரிக்கெட் சூதாட்டக்காரர்களை மிரட்டியும் பணம் பறித்துள்ளார்” என்று அமலாக்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான ஆதாரங்களையும் அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இதன் காரணமாக அனில் தேஷ்முக், சச்சின் வாஸுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்