நாடு முழுவதும் இதுவரை பொதுமக்களுக்கு 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சைடஸ் கெடிலா நிறுவனம் உருவாக்கி உள்ள ஊசி முறை அல்லாத சைகோவ்-டி தடுப்பூசிகளை வாங்க திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக ஒரு கோடிடோஸ்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. உலகின் முதல் டி என் ஏ அடிப்படையிலான தடுப்பூசியாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சைகோவ்-டி 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் செலுத்த தகுதியான தடுப்பூசி என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மூன்று தவணையாக செலுத்தப்படும் இத்தடுப்பூசிக்கு ஒப்பதல் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்பட்ட நிலையில் உற்பத்தி மற்றும் விநியோகத்தை சைடஸ் கெடிலா தொடங்கி உள்ளது. தற்போது மாதம் ஒரு கோடி தடுப்பூசிகள் என்ற அளவில் உற்பத்தி திறன் கொண்டுள்ளது. உற்பத்தி திறன் அடிப்படையில் இளைஞர்களுக்கு முதலில் இந்த தடுப்பூசியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தசைகோவ்-டி தடுப்பூசி வரி உட்பட ரூ.358க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம் பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் தடுப்பூசியை, அவசர கால அடிப்படையில் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் 2 வயது முதல் 18 வயதுவரை உள்ளவர்களுக்கு வழங்கலாம் என கரோனா சிறப்பு நிபுணர் குழு ஒப்பதல் அளித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago