காஷ்மீர் வனப்பகுதிகளில் 27-வது நாளாக தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரம் :

 நகர்: ஜம்மு - காஷ்மீர் வனப்பகுதிகளில் தீவிரவாதிகளை தேடும் பணி 27-வது நாளினை எட்டியுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் நுழைந்திருப்பதாகவும், அவர்கள் பூஞ்ச் - ரஜோரி மாவட்டங்களுக்கு இடையேயான வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாகவும் உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், காஷ்மீர் காவல்துறையினர், ராணுவத்தினர், சிஆர்பிஎப் படையினர் அடங்கிய பாதுகாப்புப் படையினர் கடந்த அக்டோபர் 14-ம் தேதி முதலாக அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சுரன்கோட் மற்றும் மென்தார் வனப்பகுதிகளில் தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுன்ட்டரில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, தீவிரவாதிகளை பிடிக்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டது. எனினும், இதுவரை ஒரு தீவிரவாதி கூட பாதுகாப்புப் படையினரிடம் பிடிபடவில்லை.

இந்த சூழலில், ரஜோரியில் உள்ள கப்லான் வனப்பகுதியில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, நேற்று அந்த இடத்தினை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, ரஜோரி - தனமண்டி சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தீவிரவாதிகளை தேடும் பணி நேற்றுடன் 27-வது நாளினை எட்டியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்