நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 10,929 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், 392 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் கரோனா தொற்று கணிசமாகக் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 10,929 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு மிக் குறைந்த எண்ணிக்கையாகும்
அவர்களையும் சேர்த்து இதுவரை 3 கோடியே 43 லட்சத்து 44,683 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 392 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 60,265 ஆகியுள்ளது.
தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 46,950 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 29 நாட்களாக தினசரி கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழாக உள்ளது. நாடு முழுவதும் குணமடைவோர் சதவீதம் 98.23 ஆக உள்ளது.
நாடு முழுவதும் தினசரி கரோனா பாசிட்டிவ் 1.35 சதவீதமாகவும், வாராந்திர பாசிட்டிவ் 1.27 சதவீதமாகவும் உள்ளது. இதற்கிடையில், நாடு முழுவதும் 108 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளி விவரத் தில் கூறப்பட்டுள்ளது.-பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago