நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் : 12,729 பேருக்கு கரோனா தொற்று :

By செய்திப்பிரிவு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 12,729 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் 221 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 48,922 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சதவீதத்துக்கும் கீழாக (0.43 சதவீதம்) உள்ளது.

தற்போது கடந்த மார்ச் 2020-ம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த எண்ணிக்கையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 12,165 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அவர்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் 3 கோடியே 37 லட்சத்து 24,959 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் சதவீதம் 98.23 ஆக உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 107.70 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதாரத் துறை புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது. - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்