மூலப் பொருட்கள் விலை அதிகரித்ததால் : தீப்பெட்டி விலை ரூ.2 ஆக உயர்கிறது :

புதுடெல்லி: தேசிய சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலர் வி.எஸ். சேதுரத்தினம் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 1995-ம் ஆண்டு 50 பைசாவாகவும், 2007-ம்ஆண்டு ரூ.1 எனவும் தீப்பெட்டி விலை நிர்ணயிக்கப்பட்டது. அதன் பின்னர் 14 ஆண்டுகளாக தீப்பெட்டி விலை உயர்த்தப்படவில்லை. சமீபகாலமாக தீப்பெட்டி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 14 மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் மின்சாரக் கட்டணம், தொழிலாளர்களின் ஊதியம் என பல்வேறு சிக்கல்கள் தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு உள்ளது. எனவே, 50 குச்சிகள் கொண்ட தீப்பெட்டியை ரூ.2-க்கு விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரூ.1 க்கு தீப்பெட்டி விற்கும்போது பெட்டிகளில் 25 முதல் 30 குச்சிகளை வைப்போம். தற்போது விலையேற்றப்பட்ட பின்னர் ரூ.2-க்கு 50 தீக்குச்சிகளை பெட்டியில் வைப்போம்.

இந்தத் தொழிலில் சுமார் 300 சிறிய தொழிற்சாலைகளும், 50 பெரிய அளவிலான தொழிற்சாலைகளும் உள்ளன. மாதத்துக்கு 100 கோடி தீப்பெட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 5 லட்சம் தொழிலாளர்கள் இதை நம்பி வாழ்க்கையை நடத்துகின்றனர். இதில் 90 சதவீதம் பேர் பெண்கள். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்