அருகி வரும் ‘கட்லா’ வகை மீனை : மாநில மீனாக அறிவித்தது சிக்கிம் அரசு :

By செய்திப்பிரிவு

காங்டாக்: கட்லாவை மாநில மீனாக சிக்கிம் மாநில அரசு அறிவித்துள்ளது.

சிக்கிம் மாநில மீன்வளத் துறை கூடுதல் இயக்குநர் சி.எஸ்.ராய் நேற்று கூறியதாவது: சிக்கிம் மாநிலத்தில் பாயும் தீஸ்தா மற்றும் ரங்கித் ஆறுகள் மற்றும் அதன் கிளை ஆறுகளில் கட்லா வகை மீன்கள் அதிகம் காணப்படுகின்றன. காப்பர் மசீர் என்றும் அழைக்கப்படும் இந்த மீன்கள் அருகி வருவதாக, லக்னோவில் உள்ள ஐசிஏஆர்-தேசிய மீன் மரபணு வளங்கள் அமைப்பு (ஐசிஏஆர்-என்பிஎப்ஜிஆர்) கடந்த 1992-ம் ஆண்டு அறிவித்தது. பின்னர் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியமும் 2014-ல் இந்த மீன்களை அருகி வரும் இனங்கள் பட்டியலில் சேர்த்தது.

எனவே, கட்லா மீன் இனங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவற்றை மாநில மீன் என அறிவித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த மீன்களை பொதுமக்கள் மிகவும் விரும்புவதுடன் இவற்றுக்கு நல்ல சந்தை மதிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE