சிறுமி பாலியல் வன்கொடுமை - வழக்கில் தேடப்பட்ட இளைஞர்ரயில் முன் பாய்ந்து தற்கொலை :

By என்.மகேஷ்குமார்

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் சிங்கிரேனி காலனியை சேர்ந்த 6 வயது சிறுமி சில நாட்களுக்கு முன்னர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அதே பகுதியில் வசிக்கும் ராஜு (30) என்பவரை போலீஸார் தேடி வந்தனர். அவரைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.

கூலித் தொழிலாளியான ராஜு போதைப் பழக்கத்துக்கு அடிமையானதால் அவரது தாயாரும் மனைவியும் அவரை பிரிந்து சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில் தெலங்கானா மாநிலம், ஜனகாம் மாவட்டம், கன்பூர் ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு ராஜு நேற்று இறந்து கிடந்தார். அவரது உடலை போலீஸார் மீட்டு வாரங்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது ஆம்புலன்ஸ் வாகனம் மீது பொதுமக்கள் காலணிகளை வீசி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

பிரேதப் பரிசோதனைக்கு பிறகு ராஜுவின் சடலத்தை பெற்றுக் கொள்ள அவரது குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.

ராஜுவை போலீஸார் 3 நாட்களுக்கு முன்பே கைது செய்து ரயில் முன் தள்ளி கொன்று விட்டதாக அவரது மனைவி மவுனிகா புகார் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்