நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் 2 நாட்களுக்கு முன்னதாகவே முடித்து கொள்ளப்பட்டது. இந்த பின்னணயில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டி காங்கிரஸ் உட்பட 15 கட்சிகள் சார்பில் டெல்லியில் நேற்று கண்டன பேரணி நடைபெற்றது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற பேரணியில் தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், திமுக, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தின்போது ராகுல் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:
நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக கடந்த புதன்கிழமை மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்கள்அவமானப்படுத்தப்பட்டனர். சுருக்கமாக சொல்வதென்றால் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று பிற்பகலில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை சந்தித்து மனு அளித்தனர்.
மத்திய அரசு பதில் புகார்
இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் வெங்கய்ய நாயுடுவை நேற்றுசந்தித்துப் பேசினர். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அநாகரிக செயல் குறித்து அமைச்சர்கள் புகார் தெரிவித்தனர். - பிடிஐமுக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago