மத்திய பிரதேச மாநிலம் பாலாஹாட் மாவட்டத்தில் உள்ள ஜெய்ராஸி கிராமத்தில் நக்சல்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக போலீ ஸாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் அதிகாலை அங்கு சென்ற போலீஸார் மீது, நக்சல்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். போலீஸாரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.
சுமார் அரை மணி நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டைக்கு பிறகு, நக்சல் தீவிரவாதி ஒருவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், அவர் சத்தீஸ்கரை சேர்ந்த சந்தீப் குஞ்சம் என்பது தெரிய வந்தது. இவர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.8 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என சத்தீஸ்கர் போலீஸார் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், தப்பிச் சென்ற மற்ற நக்சல்களை தேடும் பணியில் மத்திய பிரதேச போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago