ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ)உள்நாட்டு தொழில் நுட்பத்துடன் குரூஸ் ஏவுகணையை தயாரித்துள்ளது. நேற்று காலை ஒடிசா மாநிலம் பலாசோரில் இந்த ஏவுகணை சோதனை நடைபெற்றது. 150 கி.மீ. சுற்றளவுக்குள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை துல்லியமாகத் தாக்கி அழித்தது.
சோதனை வெற்றிகரமாக நடந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். ஏவுகணையை செலுத்த பயன்படுத்தப்பட்ட குரூஸ் இன்ஜின் முற்றிலும் இந்தி யாவிலேயே தயாரிக்கப்பட்டது. வரும் காலத்தில் மேலும் பல சோதனைககள் நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
ஏற்கெனவே, கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதியன்று இந்தியா வில் தயாரிக்கப்பட்ட தரையில் இருந்து விண்ணில் சென்று தாக்கும் புதிய தலைமுறைஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.-பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago