தேச துரோக வழக்கில் ஆந்திர எம்.பி. ரகுராமுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் :

By என். மகேஷ்குமார்

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், நரசராவ்பேட்டை தொகுதி மக்களவை எம்.பி. ரகுராம கிருஷ்ணம்ம ராஜு. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சி மீதான அதிருப்தியால், அரசின் செயல்பாடுகளை கடந்த சில மாதங்களாக விமர்சித்து வந்தார்.

அவரது பேச்சு இரு சமூகத்தினரிடையே கலவரத்தை தூண்டுவதாக கூறி, அவரை தேச துரோக வழக்கில் போலீஸார் கடந்த 14-ம் தேதி கைது செய்தனர்.

மறுநாள் குண்டூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரகுராம், போலீஸார் தன்னை அடித்ததாக நீதிபதியிடம் காயங் களை காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ரகுராமின் ஜாமீன் மனுவை ஆந்திர உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, செகந்திராபாத் ராணுவ மருத்துவமனையின் மருத்துவப் பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, போலீஸ் காவலில் மனுதாரர் மோசமாக நடத்தப்பட்டுள்ளதை மறுக்க முடியாது என நீதிபதி கள் கருத்து தெரிவித்தனர். இதை யடுத்து ரகுராமின் உடல்நிலை கருதி, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினர்.

விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கக் கூடாது உள் ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை காரணமாக விசாரணை நீதிமன்றத்தில் ஜாமீன் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை ரகுராமால் தாக்கல் செய்ய முடியவில்லை. செகந்திராபாத் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரகுராம், நாளை ஜாமீனில் விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்