டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மட்டுமின்றி படுக்கைகள் தட்டுப்பாடும் உள்ளது. இந்நிலையில், டெல்லியை ஒட்டி யுள்ள கிரேட்டர் நொய்டாவின் ‘கவுர் சவுந்தர்யம் சொசைட்டி' அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 1,600 பேரில் 120 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதை சமாளிக்க குடியிருப்பின் சமுதாயக் கூடம் தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் அங்கு வசிக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட 40 பேரை கொண்டு பணிக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
பணிக்குழுவின் நிர்வாகியான டாக்டர் பி.கே.கோயல், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, “இங்கு 28 படுக்கை வசதியுடன் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் 25 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி உள்ளது. இதற்கான அனுமதியை கவுதம்புத் நகர் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியிடம் பெற்றோம். இங்கு இதுவரை 15 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்” என்றார்.
பணிக்குழுவில் குடியிருப்பில் வசிக்கும் 7 மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் காணொலி வாயிலாக நோயாளி களுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago