புதிதாக தொழில் தொடங்குவதற்குஉரிமம் வழங்குவது எளிதாக்கப்படும் : பிரதமர் நரேந்திர மோடி உறுதி

By ஆர்.ஷபிமுன்னா

புதிதாக தொழில் தொடங்குவ தற்கு உரிமம் வழங்குவது எளிதாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

தொழில்துறையின் உற்பத்தியை அதிகரிக்க அரசு அறிவித்துள்ள உற்பத்தி சார் ஊக்க சலுகை (பிஎல்ஐ) திட்டம் குறித்த காணொளி கருத்தரங்கில் அவர் இத்தகைய உறுதியை அளித்தார்.

இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும் சிறிய அளவில் அல்லது பெருநிறுவனங்கள் துவங்கும் தொழிலுக்காக பல உரிமங்கள் பெற வேண்டி உள்ளது. இவை, அப்பகுதி நிர்வாகம், மாநில அரசு மற்றும் மத்திய அரசு என பல எண்ணிக்கையில் தொடரும் நிலை உள்ளது. இதன் மீது இந்திய தேசிய உணவு விடுதிகள் சங் கம் சார்பில், எப்.ஒய்20 எனும் பெயரில் ஒரு புள்ளிவிவரம் வெளியிடப்பட்டது. அதில், ஒருஉதாரணமாக டெல்லியில் ஒருஉணவு விடுதி தொடங்க, காவல்துறை, தீயணப்புத்துறை, மத்திய, மாநில அரசுகள் உள்ளிட்ட 45 வகையான உரிமங்கள் பெற வேண்டிஇருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை கவனத்தில் கொண்ட பிரதமர் தனது உரையில் இந்த உறுதியை வழங்கியதாகத் தெரிகிறது.

இந்தியாவில் தொழில் துவங்குவதில் உள்ள சிக்கல் குறித்து அவரது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதை ஏற்ற பிரதமர்மோடி அவை எளிமைப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். ‘இந்த பிரச்சினைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து தீர்க்க உள்ளோம். தொழில் துவங்குவதற்காக பல விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் முறைவில் இருந்து விடுபட உரிய நடவடிக்கை எடுப்போம்.’ எனத் தெரிவித்தார்.

‘உற்பத்தி திறனை அதிகரித்துள்ள நாடுகளின் கொள்கைகளை முன்உதாரணமாகக் கொண்டு செயல்பட உள்ளது. நம்மை சுற்றியுள்ள நாடுகள் ‘மேக் இன் இந்தியா’ என்பதை அடிப்படையாகக் கொள்ளச் செய்ய வேண்டும். இதற்காக, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை விரிவுபடுத்தப்பட வேண்டும்’ என்றார்.

கரோனா பரவல் துவங்கிய போது இந்திய தொழில்துறை பாதிக்கப்படாமல் இருப்பதற்காக மத்திய அரசு பல சலுகைகளை அறிவித்திருந்தது. இதில், முக்கியமாக தொழில்துறைக்கு சுமார் இரண்டரை லட்சம் கோடிரூபாயை உற்பத்தி அடிப்படையிலான ஊக்கச்சலுகை அறிவித்திருந்தது. இதை படிப்படியாகஒவ்வொரு தொழில் பிரிவுகளுக்கும் வழங்கி அதன் உற்பத்திகள் அதிகரித்து வருகின்றன. இப்பட்டியலில் இடம்பெற்ற தொலைதொடர்புத்துறைக்கான உதிரிபாகங்கள் மற்றும் டெலிகாம்இயந்திரங்களின் உற்பத்தி அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்