காஷ்மீரில் பாதுகாப்புப் படை யினர் அண்மையில் நடத்திய சோதனையின்போது பல்வேறு இடங்களில் இருந்து காந்த வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட் டன.
இவை அனைத்தும் ஆப்கானிஸ்தானில் இருந்து தீவிரவாதிகளால் காஷ்மீருக்குக் கொண்டு வரப்பட்டவை என்பது தெரியவந்தது. இந்த காந்த வெடி குண்டுகளை வாகனங்களில் எளிதில் ஒட்டவைத்து எந்த நேரத்திலும் ரிமோட் மூலம் வெடிக்க வைக்க முடியும்.
இந்த குண்டுகளை ஆளில்லாத விமானங்களில் வைத்து காஷ்மீரின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி தீவிர வாதிகள் சதித்திட்டத்தை அரங் கேற்றத் திட்டமிட்டுள்ளனர் என்று பாதுகாப்புப் படையினர் தெரிவித் தனர். இந்த சதி தற்போது முறி யடிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தானை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி (எல்ஓசி) உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்காணிப்புப் பணிகளை ராணுவ அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
பிப்ரவரி மாதத்தில் மட்டும் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்து 15 காந்த வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் இடையே மேலும் பிளவை ஏற்படுத்த ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் இதைச் செய் திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
பெரும்பாலும் ஆளில்லாத விமானங்கள் (ட்ரோன்), சுரங்கப் பாதை வழியாக இந்தியாவுக்கு இவை கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் கண்காணிப்பு பணிகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago