கோதுமை ஏற்றி வந்த ரயிலை நிறுத்திய பஞ்சாப் விவசாயிகள்

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராட் டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

இதனைத் தொடர்ந்து, தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் நடவடிக்கையில் விவசாய சங்கங்கள் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் மோஹா மாவட்டத்தில் உள்ள தாக்ரு கிராமத்தில் கோதுமையை ஏற்றி வந்த சரக்கு ரயிலை விவசாயிகள் நேற்று மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு வந்த போலீஸார், ரயில் மறியலை கைவிடுமாறு விவசாயிகளிடம் பேச்சு நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்