காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் (10 ஆண்டுகளுக்கு முன்) வரையறையின்றி வங்கிகள் கடன் வழங்க அனுமதித்ததே வங்கிகளின் நலிவடையக் காரணம் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
பட்ஜெட் குறித்து காணொலி காட்சி மூலம் பேசிய பிரதமர், நிதித் துறையைப் பொறுத்தமட்டில் அரசுக்கு தெளிவான நீண்ட கால கொள்கை உள்ளது. இதில் சமரசப் போக்கிற்கே இடமில்லை என்று குறிப்பிட்டார். அவர் மேலும் பேசியதாவது:
பொதுத்துறை நிறுவனங்களை வலிமைப்படுத்துவதற்கு அரசு முன்னுரிமை அளித்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் அதற்கான முதலீடுகளை திரட்டுவதில்தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் விதமாக பட்ஜெட்டில் புதிய சொத்து மறு சீரமைப்பு சட்டம் (ஏஆர்சி) மாற்றம் செய்யப் பட்டுள்ளது. இது வாராக் கடனை வசூலிப்பதற்கு வழிவகுக்கும்.
அரசு எடுக்கும் எந்த முடிவும்தவறான உள்நோக்கம் கொண்டவை அல்ல. குறிப்பாக வங்கித் துறை நலிவடையக் காரணமே 10 ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் வரையறையின்றி கடன்வழங்கியதுதான். அது தற்போதுகட்டுக்குள் கொண்டு வரப்பட் டுள்ளது.
திவால் மசோதா சட்டம் கொண்டுவரப்பட்டதன் மூலம் நலிவடைந்த நிறுவனத்தை வாங்க முன்வருவோருக்கும், அதை விற்போருக்கும் நம்பிக்கை உருவாகியுள்ளது. தனியார் நிறு வனங்கள் செயல்பட உரிய வழி வகைகள் செய்யப்படும் அதேநேரம் பொதுத்துறை வங்கிகள் மற்றும் காப்பீட்டு துறைகளின் செயல்பாடு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்பதிலும் மாறுபட்ட கருத்து கிடையாது.
இந்தியாவில் வங்கித் துறை மற்றும் காப்பீட்டுத் துறை வளர்ச் சிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது, காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 74 சதவீதமாக உயர்த்துவது மற்றும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) ஆகியன முக்கியமான நடவடிக்கைகளாகும்.
கடன் பத்திரங்கள், ஓய்வூதிய முதலீடு (நிதியம்) மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவின் எதிர்காலத்தில் மிகச் சிறப்பாக நிர்ணயிக்க வல்லவை. இதைக் கருத்தில் கொண்டே பட்ஜெட்டில் சொத்து உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடன் பத்திர நிதியம், ஓய்வூதிய நிதியம், காப்பீட்டு நிறுவனங்கள் அரசின் கட்டமைப்பு திட்டப் பணிகளில் முதலீடு செய்வதற்கு ஈடுபடுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன.
சுய சார்பு பொருளாதாரத்தை உருவாக்கும் விதமாக ஆத்மநிர்பார் பாரத் திட்டம் முன்னெ டுத்துச் செல்லப்படுகிறது. இதைக்கருத்தில் கொண்டே ஸ்டார்ட்அப்கள் மற்றும் சிறு, குறு,நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாகநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கரோனா ஊரடங்கு காலத்தில் இவை பெருமளவு பாதிக்கப்பட்டாலும் அவை மீண்டும் செயல்பட வசதியாக ரூ. 2.4 லட்சம்கோடி கடன் பெற வழியேற்படுத்தப்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கு காலத்தில் நிதித்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது. இது ரூ. 6 லட்சம் கோடி அளவுக்கு வளர்ச்சியடையும் என நம்புவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago