கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘தங்க வங்கத்தை கட்டமைக்க இலக்கு’ என்ற பிரச்சாரத்தை பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டா தொடங்கி வைத்தார். இதுகுறித்து நட்டா கூறியதாவது:
மேற்கு வங்க மாநில முன்னேற்றத்துக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது பற்றி பொதுமக்களிடம் ஆலோசனை கேட்கப்படும். மாநிலம் முழுவதும் 294 தொகுதிகளில் உள்ள சுமார் 2 கோடி மக்களிடம் ஆலோசனை கேட்க உள்ளோம். இதற்காக, 30 ஆயிரம் இடங்களில் ஆலோசனைப் பெட்டிகள் வைக்கப்படும். இதில் வரும் மார்ச் 3-ம்தேதி முதல் 30-ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை தெரிவிக்கலாம். இந்த ஆலோசனைகளின் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago