இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்),இந்திய காவல் பணி (ஐபிஎஸ்)உள்ளிட்ட குடிமைப் பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வைக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4-ம் தேதி யுபிஎஸ்சி நடத்தியது.
கரோனா அச்சம் காரணமாக தேர்வு எழுத முடியாமல் போன வர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க கோரி, ரச்னா சிங் என்ற தேர்வர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மத்திய அரசு தாக்கல் செய்தபதில் மனுவில் கரோனா காரணமாக கடைசி தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கலாம். மீதம் உள்ளவர்களுக்கும், வயதை கடந்தவர்களுக்கும், வேறு காரணங்களுக்காக தேர்வு எழுதாமல் விட்டவர்களுக்காகவும் எந்த தயவும் அளிக்க முடியாது என்று நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது. நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. விசாரணையின் முடிவில் நீதிபதிகள் தீர்ப்பை வழங்கினர். அதில் யுபிஎஸ்சி தேர்வு எழுத கூடுதலாக வாய்ப்பு வழங்க முடியாது என்றும் கரோனா காலத்தில் தேர்வு எழுத தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க முடியாது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பான வழக்கை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஆஜராகி வாதிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago