ஜப்பானில் தற்கொலைகளை தடுக்க தனிமை அமைச்சகம்

By செய்திப்பிரிவு

ஜப்பானில் கரோனா பிரச்சினையால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தம் மற்றும் பல்வேறு நெருக்கடிகளால் 11 ஆண்டுகளில் இல்லாத அளவு தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக பெண்கள் அதிக அளவில் தற்கொலைகள் செய்துவருகின்றனர். இதனை தடுப்பதற்காக தனிமையை போக்கும் துறை உருவாக்கப்பட்டு அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என பிரதமர் யோஷிஹிடே சுகா அறிவித்துள்ளார்.

உலகளவில் 2018-ல் பிரிட்டன் முதல் நாடாக தனிமைக்கான அமைச்சகத்தை உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து தற்போது ஜப்பானும் அத்தகைய முடிவு எடுத்துள்ளது.

கடந்த 12-ம் தேதி இதற்காக தனிமை அமைச் சகம் உருவாக்கப்பட்டு அதன் அமைச்சராக டெட்சுஷி சகமோட்டோ நியமிக்கப் பட்டுள்ளார்.

பெண்கள் அதிகம் பாதிப்பு

இதுகுறித்து பிரதமர் சுகா கூறும்போது, “கரோனா உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் தனிமையால் வாடுகின்றனர். இதில் ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தற்கொலை விகிதம் அதிகரித்து வருகிறது. எனவே அவர்களது பிரச்சினைகளை இனம் கண்டு, அவற்றைத் தீர்க்கும் நடவடிக்களையும், கொள்கைமுடிவுகளை அமைச்சர் சகமோட்டோ அறிவிப்பார்"என்றார்.

கடந்த 11 ஆண்டுகளில் முதன்முறையாக ஜப்பானில் தற்கொலை விகிதம் அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்