யூனியன் பிரதேசமான தாத்ரா நாகர் ஹவேலியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு 7-வது முறையாக தேர்வு செய்யப் பட்டவர் மோகன் டெல்கர்.
இவர் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். மத்திய பணியாளர் நலத்துறை மற்றும் சட்டம் நீதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராகவும் உள்துறைக்கான ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இருந்தார்.
முன்னதாக இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, அக் கட்சியின் தாத்ரா நாகர் ஹவேலி தலைவராகவும் பதவி வகித்தார்.
இந்நிலையில் மும்பையில் உள்ள மெரைன் டிரைவ் ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு மோகன் டெல்கர் தங்கினார். நேற்று அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போலீஸார் அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மும்பை காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி யில், “மோகன் டெல்கர் தங்கியஅறையிலிருந்து தற்கொலை குறிப்பு கிடைத்துள்ளது. விசாரணை நடந்து வருகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு பிறகே உண்மையான காரணம்தெரியவரும்” என்று கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago