ஹைதராபாத்தில் சிகிச்சை பெறும் ரஜினி இன்று டிஸ்சார்ஜ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தகவல்

By என். மகேஷ்குமார்

ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இயக்குநர் சிவா இயக்கத்தில்உருவாகி வரும்'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக, நடிகர் ரஜினிகாந்த் கடந்த 13-ம் தேதி ஹைதராபாத் புறப்பட்டு வந்தார். இந்நிலையில்், படக்குழுவினருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால்,ரஜினிக்கு தொற்று இல்லை எனதெரியவந்தது. ஆனாலும், ரஜினி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் காலையில் திடீரென ரஜினிக்கு உடல் சோர்வு ஏற்பட்டு, ரத்த அழுத்தத்தில் ஏற்றஇறக்கம் ஏற்பட்டது. உடனடியாகஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ளஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அனைத்து உடல் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. ரத்த அழுத்த மாறுபாடு காரணமாகவே ரஜினியின் உடல்நிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, மருத்துவப் பரிசோதனை அறிக்கை நேற்றுமாலை 6 மணிக்கு வெளியிட்டனர். அதில், ரஜினிக்கு பயப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லைஎன கூறப்பட்டுள்ளது. மேலும் சில மருத்துவப் பரிசோதனை அறிக்கை வர வேண்டி உள்ளதாகவும், அவை வந்த பின்னர் அவரது உடல்நலம் குறித்து தெரிவிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் இன்று பூரண குணமடைந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

டிஸ்சார்ஜ் ஆன பின்னர்,நடிகர் ரஜினிகாந்த் அங்கிருந்து படப்படிப்பில் கலந்து கொள்வாரா? அல்லது ஹைதராபாத் தில் இருந்து சென்னைக்கு திரும்பி சில நாட்கள் ஓய்வு எடுப்பாரா? என தெரியவில்லை.

முதல்வர் நலம் விசாரித்தார்

இதனிடையே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி மூலம் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து நேற்று விசாரித்தார். ரஜினி விரைவில் குணமடைய வேண்டுமென தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மேலும், தெலங்கானாஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜனும் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அவர் விரைவில் குணமடைய வேண்டி கடவுளை பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்