இந்திய மொழிகள் மத்திய நிறுவனத்தை பல்கலைக்கழகமாக மேம்படுத்த மத்திய அரசு திட்டம் என்.கோபாலசுவாமி தலைமையில் குழு

By ஆர்.ஷபிமுன்னா

இந்திய மொழிகளை வளர்க்கும் பொருட்டு கர்நாடக மாநிலம் மைசூருவில் கடந்த 1969-ல் இந்திய மொழிகள் மத்திய நிறுவனம் (சிஐஐஎல்) தொடங்கப்பட்டது.

கடந்த பல வருடங்களாகசிஐஐஎல் நிறுவனத்திற்கு போதுமான அலுவலர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், அதன் செயல்பாடுகள் முடங்கியதாக புகார் எழுந்தது. இந்நிலையில், சிஐஐஎல்நிறுவனத்தை மொழிகளுக்கான மத்திய பல்கலைக்கழகமாக மேம்படுத்த பாஜக தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயா (பிபிவி) எனப் பெயரிடப்பட உள்ளதற்கானக் கூறுகளை ஆய்வுசெய்ய குஜராத் மாநிலப் பிரிவில்பணியாற்றி ஓய்வுபெற்ற தமிழரான என்.கோபாலசுவாமி தலைமையில் 11 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையருமான என்.கோபாலசுவாமி கூறும்போது, "தற்போது இந்திய மொழிகளை மொழிபெயர்ப்பதற்கு போதிய வல்லுநர்கள் இல்லை. எனவே,இதை முக்கிய குறிக்கோளாக்கி அனைத்து மொழிகளையும் வளர்க்கும் வகையில் சிஐஐஎல்நிறுவனத்தை மத்திய பல்கலைக்கழகமாக மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம்" என்றார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் சிஐஐஎல் நிறுவன முன்னாள் இயக்குநர் க.ராமசாமி கூறும்போது, "சிஐஐஎல்-ன் கீழ் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தைக் கொண்டு வரஉள்ளதாக தகவல் வெளியாகின்றன. இவ்வாறு செய்தால் அது தமிழ் உள்ளிட்ட மொழிகளின் சுதந்திரமான வளர்ச்சிக்கு தடையாக அமைந்து விடும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்