கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு கரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கடந்த மாதம் 30-ம் தேதி அரசுமுறைப் பயணமாக டெல்லிக்கு சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் திருவனந்தபுரம் திரும்பிய அவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் தலை வலி இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், முகமது ஆரிப் கானுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் மாளிகையிலேயே அவருக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆளுநர் முகமது ஆரிப் கான் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்