கரோனா தொற்றிலிருந்து78 லட்சம் பேர் குணமடைந்தனர் 5.16 லட்சம் பேர் சிகிச்சை பெறுகின்றனர்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொற்றில் இருந்து 78 லட்சம் பேர் குண மடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் நேற்று 50,920 பேருக்கு கரோனா தொற்றுஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால்பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 84,62,080 ஆக உயர்ந்துள்ளது. இதில் 78,19,886 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 53,920பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தேசிய அளவில் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 92.41 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் 5,16,632 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 577 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,25,562 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் புதிதாக 6,870 பேருக்கு வைரஸ் தொற்றுஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 17,10,314 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 15,62,342 பேர் குணமடைந்துள்ளனர். 1,03,007 பேர் சிகிச்சையில் உள்ளனர். 44,965 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் புதிதாக 2,960 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 8,41,889 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 7,97,204 பேர் குணமடைந்துள்ளனர். 33,338 பேர் சிகிச்சையில் உள்ளனர். 11,347 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் புதிதாக 2,410பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 8,38,363 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 8,09,770 பேர் குணமடைந்துள்ளனர். 21,825 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,768 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் புதிதாக 2,173 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 4,93,527 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,63,240 பேர் குண மடைந்துள்ளனர். 23,132 பேர் சிகிச்சையில் உள்ளனர். 7,155 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் நேற்று 7,201 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 4,80,669 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,95,524 பேர் குணமடைந்துள்ளனர். 83,261 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,668 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் புதிதாக 7,178 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 4,23,831 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,77,276 பேர் குணமடைந்துள்ளனர். 39,722 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,833 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்குவங்கத்தில் புதிதாக 3,942 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 3,97,466 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,54,732 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 35,557 பேர் சிகிச்சையில் உள்ளனர். 7,177 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்