அடுத்த ஆண்டுஹஜ் யாத்திரைக்குமுன்பதிவு தொடக்கம்

By செய்திப்பிரிவு

அடுத்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை குறித்து ஹஜ் குழு மற்றும் நிர்வாகிகளுடன் மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி மும்பையில் நேற்று ஆலோ

சனை நடத்தினார். பின்னர் அவர்

கூறியதாவது:

அடுத்த 2021-ம் ஆண்டில் ஹஜ் புனிதப் பயணத்துக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இணைய வழியிலோ, அஞ்சல் மூலமோ ஹஜ் செல்போன் செயலி மூலமோ வரும் டிசம்பர் 10-ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

கரோனா சூழலை கருத்தில் கொண்டு ஹஜ் பயணம் புறப்படும் இடம் 21-ல் இருந்து 10 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்துக்கு ஆண்துணை இல்லாமல் செல்லும்பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்தப் பயணத்துக்கு கரோனா இல்லை என்ற சான்றிதழ் அவசியம்.

இவ்வாறு நக்வி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்