இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குபிரதமர் மோடி வாழ்த்து

By செய்திப்பிரிவு

பிஎஸ்எஸ்வி சி-49 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இந்திய விண்வெளி ஆய்வுநிறுவன (இஸ்ரோ) விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இஓஎஸ்-1 உட்பட 10 செயற்கைக்கோள்களுடன் சி-49 ராக்கெட்நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறுகையில், ‘‘பிஎஸ்எஸ்பி சி-49 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக இஸ்ரோ மற்றும் இந்திய விண்வெளித்துறைக்கு எனது பாராட்டுகளை தெரிவிக் கிறேன்.

நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள வேளையில், நமது விஞ்ஞானிகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, உரிய காலக்கெடுவுக்குள் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதை உறுதி செய்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், “இந்திய செயற்கைக்கோளுடன் அமெரிக்கா மற்றும் லக்ஸம்பர்க்கின் தலா 4 செயற்கைக்கோள்களும் லிதுவேனியாவின் ஒரு செயற்கைக்கோளும் விண்ணில் ஏவப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்