புதுடெல்லி: உத்தராகண்டில் 80 ஆசிரியர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, 84 பள்ளிகள் 5 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன.
உத்தராகண்டில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த 2-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன. இந்நிலையில், பாரி மாவட்டம் கல்ஜிகால், கிர்சு, பாரி, கோட், பபோ ஆகிய வட்டங்களுக்குட்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் 80 ஆசிரியர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 84 பள்ளிகள் 5 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை செயலாளர் அமித் நெகி கூறும்போது, “மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து 13 மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனா பரவுவதைத் தடுப்பதற்கான நடைமுறைகளைப் பின்பற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு கல்வித் துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. குளிர்காலம் என்பதால் கரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பண்டிகைக் காலத்தில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகக் கடைபிடிக்க வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago