மகாராஷ்டிர சட்டப்பேரவையின் உரிமை மீறல் பிரச்சினையில் அர்னாப் கோஸ்வாமிக்கு எழுதிய கடிதம் தொடர்பாக ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது என்று விளக்கம் கேட்டு பேரவைச் செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மும்பையில் கட்டிட உள் அலங் கார வடிவமைப்பாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் அவரை தற் கொலைக்குத் தூண்டியதாக அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டார். இதனிடையே, தொலைக்காட்சியில் வெளியான செய்தி தொடர்பாக மகாராஷ்டிர சட்டப்பேரவையின் உரிமையை மீறியதாக ஏற்கெனவே அர்னா புக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதுபற்றி அவர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். உச்சநீதிமன்றத்தை அணுகியதன் மூலம் பேரவை நடவடிக் கைகளின்ரகசியத்தன்மையை மீறிவிட்டதாகக் குற்றம்சாட்டி அர்னாபுக்கு சட்டப்பேரவைச் செயலாளர் கடந்த மாதம் 13-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். இந்த வழக்கிலும் அர்னாபை கைது செய்ய முயற்சிகள் நடந்தன.
இந்நிலையில், அர்னாப் சார்பில் அவரது வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அர்னாபுக்கு எழுதிய கடிதம் நீதி நிர்வாகத்தில் குறுக்கிடுவதாக இருப்பதாகவும் அவரை மிரட்டுவதாக உள்ளதாக வும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஏன் அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது என மகாராஷ்டிர பேரவை செயலாளர் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர். அதுவரை இந்த விவகாரத்தில் அர்னாபை கைது செய்ய தடை விதித்தனர். மேலும், அடுத்த விசாரணைக்கு பேரவைச் செயலாளர் நேரில் ஆஜராகுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago