கரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் 92.2% ஆக உயர்வு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று 50,210 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதுவரை 83,64,086 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 77,11,809 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 55,331 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தேசிய அளவில் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 92.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் 5,27,962 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 704 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,24,315 ஆக அதிகரித் துள்ளது. மகாராஷ்டிராவில் 1,13,645 பேர், கர்நாடகாவில் 35,712 பேர், ஆந்திராவில் 21,438 பேர், உத்தர பிரதேசத்தில் 22,676 பேர், கேரளாவில் 84,087 பேர், டெல்லியில் 37,369 பேர், மேற்குவங்கத்தில் 36,246 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கேரளா, டெல்லி, மேற்கு வங்கத்தில் தினசரி கரோனா தொற்று அதிகமாக பதிவாகி வருகிறது. இதர மாநிலங்களில் வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்