கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 5.33 லட்சம் பேருக்கு சிகிச்சை 76.5 லட்சம் பேர் குணமடைந்தனர்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 5.33 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் நேற்று 46,253 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 83,13,876 ஆக உயர்ந்துள்ளது. இதில் 76,56,478 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 53,357 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தேசிய அளவில் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 92.09 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக தினசரி கரோனா தொற்றைவிட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதன்காரணமாக நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. மருத்துவமனைகளில் தற்போது 5,33,787 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 514 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,23,611 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் புதிதாக 4,909 பேருக்கு வைரஸ் தொற்றுஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 16,92,693 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 15,31,277 பேர் குணமடைந்துள்ளனர். 1,17,168 பேர் சிகிச்சையில் உள்ளனர். 44,248 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் புதிதாக 2,756 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 8,32,396 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 7,80,735 பேர் குணமடைந்துள்ளனர். 40,414 பேர் சிகிச்சையில் உள்ளனர். 11,247 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் புதிதாக 2,849 பேரிடம் வைரஸ் தொற்று கண்ட றியப்பட்டது. அந்த மாநிலத்தில் 8,30,731 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 8,02,325 பேர் குணமடைந்துள்ளனர். 21,672 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6,734 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் புதிதாக 1,726 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 4,87,335 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,57,708 பேர் குண மடைந்துள்ளனர். 22,538 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரளாவில் நேற்று 8,516 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் இதுவரை 4,59,646 பேர் வைர ஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,72,951 பேர் குணமடைந்துள்ளனர். 84,995 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

டெல்லியில் புதிதாக 6,725 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 4,03,096 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,60,069 பேர் குணமடைந்துள்ளனர். 36,375 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று குறைந்து வருகிறது. எனினும் கேரளா, டெல்லியில் மட்டும் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்